வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 36,067 பேர் கைது செய்யப்பட்டதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஸ்பிரிட் உற்பத்தி செய்தமை அதனை வைத்திருந்தமை மற்றும் கொண்டுசென்றமை தொடர்பில் 18,572 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் வரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2,296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி 400 மில்லியன் ரூபா என அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததன் பின்னர் 116 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளதாக கலால் வரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.










