3,620 சங்குகளுடன் ஒருவர் கைது!

மன்னாரில் சட்டபூர்வமற்ற முறையில் கடல் சங்குகளை அடம்பன் பொலிஸ் பிரிவில் பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் , சங்குகளும் மீட் கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில், “எங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து அடம்பன் பொலிஸ் பிரிவில் நாயாற்றுப் பகுதியில் சங்கு உடைக்கும் இடத்தைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அனுமதிப் பத்திரமின்றி 70 மில்லிமீற்றருக்குக் குறைந்த 3 ஆயிரத்து 620 சங்குகளைத் தன் வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியகரிசல் பகுதியைச் சேர்ந்த 50 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.” – என்றனர்.

Related Articles

Latest Articles