சட்டவிரோதமாக வௌிநாட்டு சிகரெட்களை நாட்டிற்கு கொண்டுவந்த பெண் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு வகைகளை சேர்ந்த 36,800 சிகரெட்கள் அடங்கிய 184 பொதிகள் குறித்த பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி 55,20,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண்னொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.