பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை (04) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமைவரை 5 நாட்களிலும் சபை அமர்வை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவவால் கடந்த சில மாதங்களாக வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.