“4 பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த திட்டம்”

உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (23) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போதே உயர்ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக பரிமாற்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்தியா வழங்கிவரும் ஆதரவுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் (கலாநிதி) எஸ். ஜெயசங்கர் வீடியோ செய்தி மூலம், இந்நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அங்கத்துவ உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles