வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் நேற்று பங்கேற்றிருந்தார்.
” வெலிகம பிரதேச சபையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. தென்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின்கீழ் 4 குழுக்கள் விசாரணைக்கு களமிறக்கப்பட்டுள்ளன. பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இதற்கமைய விரைவில் தகவல்கள் கிடைக்கப்பெறும் என நம்புகின்றோம். மக்களுக்கும் ஏதேனும் தகவல் தெரிந்தால் அது பற்றி எமக்கு தெரியப்படுத்தலாம்.” எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.