4 குழந்தைகளை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட தாய் 20 வருடங்களுக்கு பிறகு விடுதலை

தனது 4 குழந்தைகளை கொன்றார் எனக் கூறப்பட்டு 40 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட Kathleen Folbigg என்ற தாய், இரண்டு தசாப்தங்கள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு இன்று மன்னிப்பு வழங்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார்.

1989 மற்றும் 1999 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இவர் குழந்தைகளைக் கொலை செய்துள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த குற்றத்துக்காக 2003 ஆம் ஆண்டில் Kathleen Folbigg இற்கு 40 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், இக்குழந்தைகள் இயற்கையான காரணங்களால் உயிரிழந்திருக்கலாம் என தற்போது வெளியாகியுள்ள அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே, இவருக்கு மன்னிப்பு வழங்குவதற்கான யோசனை சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

4 மரணங்களிலும் தாயின் பங்களிப்பு குறித்தும் சந்தேக நிலை எழுந்துள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவருக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles