அதிபர், ஆசிரியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கமும், நான்கு கோரிக்கைகைளை முன்வைத்து ஆதரவை வெளியிட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு, பாடசாலை சீருடையில் செல்லும் மாணவர்களுக்கு அரைவாசி பஸ் கட்டணம் அறவீடு, மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்தல் உட்பட நான்கு கோரிக்கைகளே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன.