4 கைதிகள் தப்பியோட்டம் – ஒருவர் சிக்கினார்

குருநாகல் நீதிமன்ற வளாகத்திலுள்ள சிறைக்கூடத்திலிருந்து 4 கைதிகள் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளனர்.

இவ்வாறு தப்பியோடியவர்களில் குருநாகல் நகர்ப் பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பியோடிய சிறைக் கைதிகளில் இருவர் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களெனவும் ஏனைய இருவரும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களெனவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சிறைக்கைதிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தப்பியோடியுள்ளனர்.

Related Articles

Latest Articles