’40’ இற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர்!

” புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவும்.” – இவ்வாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. இதன்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டில் ஏற்படும் நிலைமைக்கு பொறுப்பு கூறவேண்டி வரும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் இன்று அறிவித்தார்.

அத்துடன், 10 கட்சிகளின் கூட்டணியும் தனித்தே செயற்படும் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சுசில் பிரேமஜயந்த, அநுரபிரியதர்சன யாப்பா, சுதர்ஷினி, நிமல் லான்சா உட்பட மேலும் சிலரும் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர்.

இதன்படி அரசுக்கு ஆதரவு வழங்கிய சுமார் 40 இற்கும் மேற்பட்டோர் சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles