கம்பளையில் மிகவும் சூட்சுமமான முறையில் நீண்ட நாட்களாக கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர் கம்பளை பொலிஸாரால் நேற்று (7) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இருவரும் போத்தலாப்பிட்டிய பகுதியில் வைத்து மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 40 இற்கும் மேற்பட்ட கேரள கஞ்சா பக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கஞ்சா பக்கட்டொன்று ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் தொடர்புடைய ஏனையோரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கம்பளை நிருபர் – திருமாள்