40 பேருக்கு கொரோனா – பதுளை மாவட்டத்தில் கிராமமொன்று முடக்கம்!

பதுளை மாவட்டத்தில் முதன் முறையாக கிராமமொன்று, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட் 19 தடுப்பு செயலணியினர் தெரிவித்தனர். இதனை, வெலிமடை பொலிசாரும், பொது சுகாதாரப் பிரிவினரும் உறுதி செய்துள்ளனர்.

வெலிமடைப் பகுதியின் வெலிமடை – பதுளை பிரதான வழியில் புகுல்பொலை கிராமமே, 25-06-2021 (இன்று) முதல் தொடர்ந்து இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் இரு தினங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை வெளியானபோது, 40 பேர் கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியுள்ளமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்தே, மேற்படி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கோவிட் 19 தொற்றுக்கிழக்கானவர்கள், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ககாகொல்லை மற்றும் பிந்துனுவௌ கோவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு (இன்று) அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெலிமடைப் பகுதியின் ரேந்தபொல மற்றும் பொரகஸ் ஆகிய கிராமங்களின் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடிவிடுவதற்கும், அங்காடி வியாபாரிகள் பாதைகளில் பொருட்களை வைத்து விற்பனை செய்வதற்கும், வெலிமடை பொது சுகாதாரப் பிரிவினர் உடன் தடை விதித்துள்ளனர்.

எம். செல்வராஜா ,பதுளை

Related Articles

Latest Articles