44 நாட்களுக்குள் 5591 பேருக்கு டெங்கு!

நாட்டின் 17 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பெரும்பாலானவர்கள் கொழும்பு, கம்பஹா, கண்டி, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5591 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் நாட்டின் 74 வைத்தியசாலைகளில் 342 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles