2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்ற 44,000 மாணவர்கள் இவ்வருடம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு 283616 மாணவர்கள் தோற்றியதாகவும் அதில் 171497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தேவையான குறைந்தபட்ச தகைமைகளைப் பெற்றுள்ளதாகவும் தலைவர் கூறுகிறார்.
பல்கலைக்கழகங்களுக்கு 91115 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும் அவர்களில் 41228 மாணவர்கள் பொது அனுமதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டதாகவும் திரு.சம்பத் அமரதுங்க மேலும் கூறுகிறார்.










