ஜெனிவா செல்வதால் பயன் இல்லை: பாதிக்கப்பட்ட மக்களுக்குள் எமது நாட்டிலேயே தீர்வு!

ஜெனிவா செல்வதால் பயன் இல்லை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது
நாட்டிலேயே தீர்வு!

“மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இராணுவ வெற்றியின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட இந்தச் சுதந்திர நாட்டில், யுத்த வெற்றிக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், இராணுவத் தளபதியாகத் தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட முப்படைகளின் வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினருக்கு எனது விசேட மரியாதையைச் செலுத்திக் கொள்கின்றேன்.

நாட்டுக்காகத் தங்கள் உயிர்களையும், உடல் பாகங்களையும் தியாகம் செய்த வீரர்களை நாம் என்றும் மறக்க முடியாது.

யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் வேதனையை நான் அறிவேன். பயங்கரவாத யுத்தத்தினாலேயே நானும் எனது தந்தையை (முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ) இழந்தேன். இதனால் எனக்கும் அந்த வேதனை நன்றாகவே புரியும்.

‘இராணுவ வீரர்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த நாம் தயங்கக் கூடாது. அத்துடன், இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு யுத்தம் நாட்டில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

நாட்டில் பல்வேறு இனப்பிரிவினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தீர்வுகளை மீளக்கட்டியெழுப்புதல், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் மூலம் எமது நாட்டுக்குள்ளேயே வழங்க வேண்டும்.

வருடாந்தம் ஜெனிவாவுக்குச் சென்று பேசுவதை நிறுத்தும் வகையில், நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என நான் யோசனை முன்வைக்கின்றேன்.

இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டிய உரிய இடத்தை வெறும் ரணவிரு சேவா அதிகார சபை ஊடாக மாத்திரம் பெற்றுக்கொடுக்க முடியாது. எனவே, அமெரிக்காவைப் போன்று பிரத்தியேகமானதொரு திணைக்களத்தை நிறுவி, படை வீரர்களின் நலன்புரித் திட்டங்களை விரிவான முறையில் முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் வலியுறுத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles