இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் வாழ்த்துத் தெரிவித்தார்.
ஆகாஷை தொலைபேசியூடாக நேற்று மாலை 25.11.2024 தொடர்புகொண்ட ஆளுநர், அவரை வாழ்த்தியதுடன் எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து சாதனைகளைப் படைக்கவேண்டும் என்றும் ஆளுநர் ஆகாஷிடம் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆட்டத்தில் விளையாடிய ஆகாஷ், 5 இலக்குகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.