” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கம் இன்னும் ஐந்து வருடங்களுக்கு தொடர வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அல்லாவிட்டால் நாடு சவால்களை சந்திக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலைவிடவும் மொட்டு கட்சிக்குரிய வாக்கு வங்கி தற்போது அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் மீண்டெழும் எனவும், கட்சியை மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கை இடம்பெறும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிப்பதே எமது இலக்காகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
