‘5 ஆம் திகதி இரவே பாய், படுக்கையுடன் சென்றுவிடுவேன்’ -வடிவேல் சுரேஷ்

தமிழர்களின் ஆதரவின்றி எந்தவொரு பிரதான கட்சியாலும் ஆட்சியமைக்கமுடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையில்லை என ஒரு சில இனவாதிகள் கொக்கரிக்கின்றனர். தேர்தல் முடிந்ததும் தமிழர்களின் பலம் என்னவென்பது தெரியும். தமிழர்களின் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியாலும் ஆட்சியமைக்கமுடியாது.

5 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றாலும் 6 ஆம் திகதியே வாக்கெண்ணும் பணி இடம்பெறும். வாக்கு பெட்டிகள் எல்லாம் பாதுகாப்பாக கச்சேரியில் வைக்கப்படும். எனவே, 5 ஆம் திகதி இரவே பாய், படுக்கையுடன் கச்சேரிக்கு முன் சென்று படுத்துவிடுவேன். வாக்கு பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவேன். எனக்கான வாக்குகளை எவரும் மாற்றிவிடமுடியாது.” – என்றும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles