நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 05 மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்கே இவ்வாறு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
