5 உலக கிண்ண தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர்!

போர்ச்சுகல் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார்.

உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு ‘எச்’ பிரிவில் அரங்கேறிய ஆட்டத்தில் போர்ச்சுகல், ஆப்பிரிக்க அணியான கானாவுடன் மோதியது.

புகழ்பெற்ற வீரரும், போர்ச்சுகல் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ களம் இறங்கியதால் அவர் மீது பலத்தை எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. களத்தில் பம்பரமாக சுழன்று வந்த ரொனால்டோ 30-வது நிமிடத்தில் கோல் போட்டார். ஆனால் அவர் எதிரணி வீரரை பவுல் செய்து விட்டு கோல் அடித்ததால் அது கோல் இல்லை என்று மறுக்கப்பட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

முதல் பாதி ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனால் பிற்பாதி ஆட்டம் சூடுபிடித்தது. 65-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார்.

அவருக்கு இது 5-வது உலக கோப்பை தொடராகும். இதையும் சேர்த்து அவர் ஆடிய எல்லா உலக கோப்பை தொடரிலும் குறைந்தது ஒரு கோல் போட்டுள்ளார். இதன் மூலம் 5 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை 37 வயதான ரொனால்டோ படைத்தார். ஒட்டுமொத்தத்தில் அவர் உலக கோப்பையில் அடித்த 8-வது கோல் இதுவாகும். 73-வது நிமிடத்தில் கானா வீரர் ஆந்த்ரே அயிவ் கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார். ஆனால் அவர்களது மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. போர்ச்சுகல் அணியின் உலக கோப்பை அறிமுக வீரர்களான ஜோவ் பெலிக்ஸ் 76-வது நிமிடத்திலும், ரபெல் லியோ 78-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினர். 89-வது நிமிடத்தில் கானா வீரர் ஒஸ்மான் புகாரி தலையால் முட்டி கோல் அடிக்க களத்தில் பரபரப்பு எகிறியது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி கைகூடவில்லை. முடிவில் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கானாவை சாய்த்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles