வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 22 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 4,696 நோயாளர்கள் மே மாதத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த வருடத்தில் மொத்தமாக 24,942 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தின் டெங்கு நிலவரம் தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் A.R.M. தௌபீக் தெளிவுப்படுத்தியுள்ளார்.