50 ரூபாவுக்காக ஹோட்டல் உரிமையாளரை குத்திக் கொலை செய்த நபர் கைது!

கல்கிஸ்சை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றின் உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொலைக்காக பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர் கடந்த 22 ஆம் திகதி ஹோட்டல் உரிமையாளரிடம் பலாப்பழமொன்றை விற்பனை செய்ய வந்துள்ளார். அதன் விலையாக 250 ரூபாவை நிர்ணயித்துள்ளார். எனினும், 200 ரூபாவுக்கு வழங்குமாறு ஹோட்டல் உரிமையாளர் பேரம் பேசியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்தே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலின் பின்னர் சந்தேக நபர் தப்பியோடியுள்ளார். இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் ரத்மலான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles