ஹப்புத்தளையிலிருந்து தம்பேதன்னை, புதுக்காடு ஆகிய பெருந்தோட்டப்பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 50 சாராய போத்தல்களை ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாகர தயாரட்ன தலைமை யிலான குழுவினர் இன்று கைப்பற்றினர்.
அத்துடன் இவற்றை கொண்டு சென்ற ஆட்டோவையும் பொலிசார் கைப்பற்றியதுடன், ஆட்டோ சாரதி உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.
நடமாட்டம் தடை விதிக்கப்பட்ட 22,23 ஆகிய திகதிகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கே மேற்படி சாராயப்போத்தல்கள கொண்டு செல்லப்பட்டதாக,கைது செய்யப்பட்டவர்கள் பொலிசாரிடம் தெரிவித்தனர்.
நமது நிருபர்கள்










