50 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

50 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக விலைமனு கோரல் நடவடிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரண்டு கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 50 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

எத்தனை முட்டைகளை இறக்குமதி செய்வது, எந்த இறக்குமதியாளரை தேர்வு செய்வது என்ற அனைத்து முக்கிய முடிவுகளும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் தீர்மானிக்கப்படும் என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles