522 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்ட வீடுகள்!

இ.தொ.காவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர். ஆறுமுகன் தொண்டமானால் மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டு 2013ம் ஆண்டு 4000 வீடுகளுக்கான ஒப்பந்தம் செய்து கைச்சாத்திட்டப்பட்டது. அவ்வீடமைப்பு திட்டங்கள் ஆட்சி மாற்றத்தின் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் அவ்வீடமைப்பு திட்டங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளான நீர்,மின்சாரம் மற்றும் பாதை அபிவிருத்தி என்பன செய்து கொடுக்காமல் காணப்பட்டதுடன் அம்மக்கள் குடியேற முடியாத நிலையில் தமது அதிர்ப்திகளை தெரிவித்திருந்தனர்.

மக்களின் இத்தேவையினை நிவர்த்தி செய்திடும் நோக்கில்,தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்து தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள ஜீவன் தொண்டமானால்  இவ்வீடமைப்பு திட்டங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து மக்களிடம் கையளித்திட 522 மில்லியன் ரூ பாநிதி ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் இந்திய அரசாங்கத்துடன் நல்லுறவினை வலுப்படுத்திக்கொள்ளவும் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு மலையகத்திற்கான மேலும் 10000 வீடுகளை பெற்றுத்தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாட்டில் நிலவும் கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக, அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்,  இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் நேற்றைய தினம் இணைய வழி கானொளி மூலம் 1235 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு உத்தியோகப்பூர்வமாக இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் ராகல,பத்தனை குயின்ஸ்பெரி, அக்கரப்பத்தனை, டொரிங்டன், எம்.எச், ஸ்டேலர், பொகவந்தலாவை பொகவான, குயினா, லெதண்டி, போடைஸ் ஆகிய தோட்டங்களில் நிர்மானிக்கப்பட்ட வீடுகள் நேற்று இ.தொ.காவின் முக்கியஸ்த்தர்களின் பங்குப்பற்றலுடன் கையளிக்கப்பட்டன.

அந்தவகையில் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட போடைஸ் தோட்டத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் நோர்வூட் பிரதேச சபை தலைவர் கே.ரவி குழந்தைவேவால் கையளிக்கப்பட்டன.

நோர்வூட் பிரதேச சபை தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நோர்வூட் பிரதேச சபை உபதலைவர்  .கிசோக்குமார்,பிரதேச சபை உறுப்பினர் திருமதி அருள்நாயகி,மனித வள நிதியத்தின் பணிப்பாளர் நாரத,தோட்ட முகாமையாளர்கள்,தோட்ட தலைவர்கள்,இளைஞர் அணி இணைப்பாளர்கள்,பயனாளிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Latest Articles