53 பேருக்கு கொரோனா – முடக்கப்பட்டது நீட்வூட் தோட்டம்!

ஹல்துமுள்ளைப் பகுதியின் நீட்வூட் தோட்டத்தில் 53 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியானதையடுத்து, அத் தோட்டப்பகுதியில், (இன்று) 28-07-2021ல் உடன் அமுலாகும் வகையில் பயணத்தடை பிறப்பிக்கப்பட்டிருகின்றது. இத்தகவலை ஹல்துமுள்ளை பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஆர். பிரசன்ன தெரிவித்தார்.

கடந்த 26ந் திகதி நீட்வூட் தோட்டப்பகுதியைச் சேர்ந்த 77 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகள், (இன்று) 28-07-2021ல் வெளியான போதே, மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு 28-07-2021ல் அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஹல்துமுள்ளை பகுதியில் மேலும் 43 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும், பிந்துனுவௌ மற்றும் ககாகொல்லை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இத்தகவலை பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்பிரமணியம் சுதர்சன் தெரிவித்தார்.

ஹப்புத்தளைப் பகுதியில் 27 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாகவும், பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.

இவ்வகையில் ஹல்துமுள்ளை, நீட்வூட் தோட்டம், ஹப்புத்தளை ஆகிய பகுதிகளில் 28-03-2021ல் 123 பேர் கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles