நாட்டில் சைக்கிள்களின் கையிருப்பு நிறைவடைந்துள்ள நிலையில், விநியோகஸ்தர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் சைக்கிள்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது சந்தையில் சாதாரண சைக்கிள்கள் 60 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கியர் கொண்ட சைக்கிள்களின் விலைகள் 77 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சில விற்பனை நிறுவனங்கள் தவணைக் கட்டண அடிப்படையில் சைக்கிள்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
