59 சமூக வலைத்தளங்கள் மீது கணனி குற்றச் சட்டத்தின் கீழ் விசாரணை

கடந்த திங்கட்கிழமை கலவரத்தைக் தொடர்ந்து, தீ வைப்பு மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் செயற்பட்ட சமூக வலைத்தளங்கள் குறித்து பொலிஸ் உளவுத்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான சமூக ஊடக வலையமைப்புகள் இன்னும் இனங்காணப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

கணனி குற்றச் சட்டத்தின் கீழ் இவ்வாறான சமூக வலைத்தளங்களின் நிர்வாகிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

Related Articles

Latest Articles