மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் கே.டி. லால்காந்த, யார் போராடினாலும் மக்களுக்கு தேர்தலை வழங்குவதும் அரசியலில் ஈடுபடுவதற்கான புதிய வாய்ப்பை வழங்குவதும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த புதிய நிர்வாகத்தை வழங்குவதுமே யதார்த்தம் என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான ஒரே தீர்வு அரசியல் ஸ்திரத்தன்மையே என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல மக்களின் வெற்றியை எதிர்பார்த்து இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
