6 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (24) முதல் அமுலாகும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

400 கிராம் பால் மா (லங்கா சதொச) பொதியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,030 ரூபாவாகும்.

1 கிலோ காய்ந்த மிளகாயின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1350 ரூபாவாகும்.

ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

1 கிலோ சோயா மீட்டின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 660 ரூபாவாகும்.

1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு,அதன் புதிய விலை 129 ரூபாவாகும்.

1 கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 239 ரூபாய் லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles