6 மாதங்ளுக்கு பிறகு மாகாணத் தடை நீக்கம்! பொதுப் போக்குவரத்து வழமைக்கு…

ஆறு மாதங்களுக்கு பிறகு மாகாணங்களுக்கிடையிலான தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ரயில் சேவைகளை ஆரம்பிப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. இன்று 152 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

பதுளை, காங்கேசன்துறை, மட்டக்களப்பு ஆகிய ரயில் சேவைகளையும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், மாகாணங்களுக்கிடையிலான 1600 பேருந்து சேவைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அனைத்து பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு சுகாதாரத் தரப்பினரும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

Related Articles

Latest Articles