” அடையாளம் காணப்பட்ட 02 மில்லியன் அஸ்வெசும (ஆறுதல்) பயனாளிகளில், 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
முதற்கட்டமாக 6 லட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளது. ”
இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.










