ஈரான் தெஹ்ரான் மாகாணத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த வான்வழித் தாக்குதலில் பத்துக்கும் குறைவான வயதுடைய ஆறு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக Fars news நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, அந்த மாகாணத்தில் உள்ள பஹாரெஸ்தான் கவுண்டி பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தத் துயரமான சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு பொதுமக்களின் வாழ்விடங்கள் தாக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
