நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்சோ தோட்டத்தில் நேற்று இரவு பொன்னர் சங்கர் நாடகம் ஆரம்பமானது.
இரவு முழுவதும் நாடகத்தின் கதாபாத்திரங்கள் அரங்கேற்றப்பட்டு, இன்று காலை நாடகத்தை நிறைவு செய்யும் வகையில் 60 அடி உயரம் கொண்ட கம்பத்தில் ஒருவர், ஏறி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பொழுது மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் பொன்னர், சங்கர் நாடக கூத்தின் மாஸ்டரென தெரியவருகின்றது.
60 வயது உடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வி .தீபன்ராஜ்