60 கிலோ கேரள கஞ்சாவுடன் கைது!

ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் வடமராட்சி வல்லிபுரம் காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையில் உள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கரவெட்டி ரு விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பருத்திதுறை, வல்லிபுரம் காட்டு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 02 சாக்குகளில் அடைக்கப்பட்ட ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 29 பொதிகள் அடங்கிய 60 கிலோக்கிராம் கேரள கஞ்சாவுடன் வத்திராயன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கஞ்சாவும் கைது செய்யப்பட்டவரும் பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles