76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒழுக்கத்துடன் நடந்துகொண்ட மற்றும் அபராதத் தொகையை செலுத்த முடியாத கைதிகளுக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது.
அதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாளை உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கைதி ஒருவரை பார்ப்பதற்கு குடும்பத்தில் மூவருக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.
