600 லீற்றர் பெற்றோலை பதுக்கியவர் அதிரடிப்படையால் கைது!

யாழ். மானிப்பாயில் 600 லீற்றல் பெற்றோலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றில் சட்டவிரோதமாக பெற்றோலை மறித்து வைத்திருந்த நிலையில் விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் 52 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles