அரச உத்தியோகத்தர்கள் அணியும் ஆடைகளில் திடீர் மாற்றம்?

அரச உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை தயாரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன குறிப்பிட்டார்.

பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும்போது சேலை, ஒசரியா அல்லது அலுவலகத்திற்கு ஏற்ற உடை அணியலாம் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிலர் சுற்றறிக்கையின் முதல் பகுதியை மாத்திரம் அமுல்படுத்துவதாகவும், பொருத்தமான அலுவலக ஆடை என்றால் என்ன என்பதை மறந்து விட்டதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தகுந்த அலுவலக உடையை அனுமதிக்க வேண்டும் என புதிய சுற்றறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டு, விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமைச்சரவை அமைச்சின் கீழ் ஒதுக்கப்படும் ஒதுக்கீடுகள், இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான செலவுகளுக்கு உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்ட அரசாங்க அமைச்சர்களுக்கு தனியான வரவு செலவு திட்டம் எதுவும் இல்லை என நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஏற்கனவே சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இராஜாங்க அமைச்சர்களின் செலவினங்களை, சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளில் இருந்து இயன்றவரை பயன்படுத்த வேண்டும் என நிதியமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு செய்ய முடியாத சந்தர்ப்பங்களில், தேசிய வரவு செலவுத் திணைக்களத்திடம் மேலதிக ஒதுக்கீடுகள் கோரப்பட வேண்டுமென நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles