இன்று (15) முதல் 66% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தலைவர்.ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இலங்கை மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில், 66% மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணை ஜனவரி 02 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.










