7 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பணிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், பிணைமுறி விவகாரம் உட்பட முக்கிய சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரப்பட்டுள்ள சம்பவங்கள் வருமாறு,

1. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
2. பிணைமுறி விவகாரம்
3. ஊடகவியலாளர் சிவராம் படுகொலை
4. லலித், குகன் ஆகியோர் காணாமல்போனமை.
5. வர்த்தகர் தினேஸ் சாப்டரின் மரணம்
6. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தன் ரவீந்திரநாத் காணாமல்போனமை.
7. வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

Related Articles

Latest Articles