மஸ்கெலியா, சாமிமலை ஓல்டன் தோட்டத்திலுள்ள ஏழு பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டுபேர் கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டபோதே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஓல்டன் தோட்ட முகாமையாளரையும், உதவி முகாமையாளரையும் தாக்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே 8 தொழிலாளர்கள் பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தோட்டதுரையை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி ஓல்டன் தோட்டத்தில் நான்கு பிரிவுகளிலும் உள்ள தொழிலாளர்கள் கடந்த 3 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேவேளை, பொலிஸார், தோட்ட துரைக்கு சார்பாக செயற்பட்டதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.










