7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்!

திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெவிலி ஹில்ஸ் நகரில் இன்று அதிகாலை நடைபெற்றது.

இதில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 7 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த ஓப்பன்ஹெய்மர் திரைப்பட குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles