இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெகு விமர்சையாகவும், கோலாகலமாகவும் நாளை (04) காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது.
சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் அதிதியாக பங்கேற்கவுள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிஸின் இன்று இலங்கை வரவுள்ளார்.
அதேவேளை சுதந்திர தினத்தையொட்டு அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.










