2025-இல் 7,667 புலம்பெயர் அகதிகள் உயிரிழப்பு: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த ஆண்டில், பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர் முயன்றவர்களில் 7ஆயிரத்து 667 பேர் உயிரிழந்ததோடு, பலர் மாயமாகியுள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டப்பூா்வ புலம்பெயர்வுக்கான வாய்ப்புகள் குறைந்ததால், மக்கள் ஆள்கடத்தல் கும்பல்களின் பிடியில் சிக்கி இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, மத்திய தரைக்கடல் உள்பட அபாயகரமான கடல் வழித்தடங்களில் அதிக இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

2024-இல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 200-ஆக இருந்த நிலையில், 2025-இல் அது 7 ஆயிரத்து 667-ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், இது முன்னேற்றத்தினால் ஏற்பட்ட குறைவு அல்ல என்றும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிதி ஒதுக்கீடு குறைந்ததால் மீட்புப் பணிகள் மற்றும் தரவு சேகரிப்புப் பணிகள் முடங்கியதே இதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles