76ஆவது தேசிய மாநாடுடன் மீண்டும் பலம்வாய்ந்த கட்சியாக ஐ.தே.க உருவெடுக்கும்!

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமவிங்க தலைமையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பழமையான கட்சியும் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுப்பதில் முன்னணி கட்சியாகவும் ஐ.தே.க செயல்பட்டுள்ளது. பாரம்பரியமிக்க இந்தக் கட்சியின் சமகால தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக சிறந்த நிர்வாகத்தை முன்னெடுத்துவருவதுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துவந்த இலங்கைக்கு மீண்டும் சுவாசிக்கும் சக்தியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான் கொடுத்துள்ளார். நாட்டில் சீர்குலைந்திருந்த சட்டவாட்சியை மீண்டும் வலுப்படுத்தி சகல தரப்பினரை இணைத்து சர்வக்கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான செயல்பாடுகளிலும் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.

76ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் ஐ.தே.க இந்த நாட்டின் வளர்ச்சியிலும் சிறந்த பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்தியதில் முதன்மை கட்சியாகும். கடந்த நல்லாட்சி காலத்தில் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டின் பொருளாதார அதலபாதாளத்தில் தள்ளப்பட்டது. பொருளாதாரத்தை மீண்டும் ஐ.தே.கவால் மாத்திரமே ஸ்திரப்படுத்த முடியும் என்பதை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தமது இடைகால பட்ஜெட் மற்றும் உறுதியான தீர்மானங்கள் மூலம் உணர்த்தியுள்ளார்.

ஆகவே, ஐ.தே.கவின் 76ஆவது தேசிய மாநாடுடன் கட்சி மீண்டும் பலப்படுத்தப்படும் என்பதுடன், மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துவிதமான பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles