7,872 பேருக்கு கொரோனா – 3,803 பேர் மீண்டனர் – 16 பேர் பலி!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் நேற்று (25) காலை உயிரிழந்த 70 வயதான நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் 16ஆவது மரணம் நேற்று பதிவானது.

கொழும்பு 2 பகுதியை சேர்ந்த ஒருவரே கொரோனா தொற்றால் பலியாகியுள்ளார்.

அவரது இரத்தத்தில் கிருமி தொற்று காணப்பட்டமையினால் உடலில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவர் கடந்த 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.

3 ஆயிரத்து 803 பேர் குணமடைந்துள்ளனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

4 ஆயிரத்து 503 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

Related Articles

Latest Articles