8ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் – கல்வி அமைச்சருடன் நாளை பேச்சு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (20) இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில், எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தப் போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles