8 மாதங்களில் 4,000 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளனர்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாய்க்கடிக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 4,000 ஆக அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரதி செயலாளரும் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்து தட்டுப்பாடு தொடர்பில், பதுளை- பொது வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாய் மற்றும் பூனைக் கடிகளுக்கு இலக்காவதால் ஏற்படும் நீர்வெறுப்பு நோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் ஊசி மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்த அவர்,

இவ்வாறு செல்லப்பிராணிகள் அல்லது கட்டாக்காலி நாய்களால் ஒருவர் காயங்களுக்கு உள்ளானால் அந்த பிராணியை 14 நாட்களுக்கு பாதுகாப்பாக பராமரிக்குமாறு ஆலோசனை வழங்கும் அளவிற்கு சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

Related Articles

Latest Articles