80 கிலோ கஞ்சா பூநகரியில் மீட்பு

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் 80 கிலோகிராம் கேரள கஞ்சாவும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்று திங்கட்கிழமை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் இராணுவப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பூநகரி பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் பூநகரி – கௌதாரி முனை பகுதியிலிருந்து 80 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles