8000 புதிய ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு!

அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் 8,000 ஆசிரியர்களை புதிதாக பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கல்வியியற்கல்லூரிகளில் அதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கிணங்க அடுத்த வருட ஆரம்ப பகுதியில் 8000 ஆசிரியர்களை புதிதாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கு விருப்பமுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பரீட்சை ஒன்றை நடத்தி அதன் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் புள்ளிகளின் அடிப்படையில் மாகாண சபை பாடசாலை ஆசிரியர்களாக அவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொண்டதன் பின்னர் மூன்று வருடங்களுக்குள் தேசிய கல்வி நிறுவனத்தின் ஒரு வருட டிப்ளோமா பாட நெறியை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பமளித்து பயிற்சி ஆசிரியர்களாக அவர்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles